Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் பெருமாள் கோவிலில் ... வாலேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வாலேஸ்வரி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் குசேலனாக கதகளி ஆசார்யன் கலாமண்டலம் கோபி: தேவஸ்வம் நிர்வாகம் சிறப்பு மரியாதை
எழுத்தின் அளவு:
குருவாயூரில் குசேலனாக கதகளி ஆசார்யன் கலாமண்டலம் கோபி: தேவஸ்வம் நிர்வாகம் சிறப்பு மரியாதை

பதிவு செய்த நாள்

05 செப்
2026
05:09

பாலக்காடு: கிருஷ்ணா ஜெயந்தியையொட்டி பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் சந்நிதியில் பிரபல கதகளி ஆசார்யன் கலாமண்டலம் கோபி ஆசான், குசேலனாக வேடமிட்டு ஆடி பக்தர்களையும் ரசிகர்களையும் பரவசப்படுத்தினார். நிகழ்வின் நிறைவில் குருவாயூர் தேவஸ்ம் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.


நேற்று இரவு கோவில் வளாக மேல்புத்தூர் ஆடிட்டோரியத்தில் குசேலவிருத்தம் கதகளி நிகழ்ச்சி அரங்கேறியது. குருவாயூர் சந்நிதியில் பலமுறை கிருஷ்ணனாக வேடமிட்டுத் தோன்றி முத்திரை பதித்த கோபி ஆசான், இம்முறை குசேலனாக வேடமேற்றதைக் காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இக்களத்தில் கிருஷ்ணனாகக் கலாமண்டலம் கிருஷ்ணகுமாரும், ருக்மிணியாகச் சம்பக்குளம் விஜயகுமாரும் நடித்தனர். இந்நாடக அரங்கை இரிஞ்ஞாலக்குடா பார்வதி கலா கேந்திரம் ஒருங்கிணைத்திருந்தது. கதகளி நிறைவடைந்ததும் நடைபெற்ற பாராட்டு விழாவில், தேவஸ்ம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரம்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு ஆகியோர் இணைந்து கலாமண்டலம் கோபி ஆசானுக்குப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மேலும், குருவாயூரப்பனின் திருவுருவப் படமும் பாரம்பரியக் குத்துவிளக்கும் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேவஸ்ம் நிர்வாக அதிகாரி ஹரிகோபால், பதிப்பு மேலாளர் சுரேஷ்குமார் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கவுள்ள நிலையில், இன்று மஹா கணபதி ... மேலும்
 
temple news
சென்னை: தினமலர் நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
சென்னை: வாசகர்களிடம் தனி மதிப்பை பெற்றுள்ளது, தினமலர் நாளிதழ் என, காஞ்சி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
எண்ணுார்: விநாயகர் சதுர்த்திக்கு புதுவரவாக, காளை மீது அமர்ந்திருக்கும், ‘சிக்ஸ் பேக்’ விநாயகர் ... மேலும்
 
temple news
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar