தஞ்சை பெரிய கோயிலில் மஹாநந்திக்கு 12 வகை திரவியங்களால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2026 12:09
தஞ்சை; தஞ்சை பெரிய கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்திக்கு 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் ஆவணி மாதத்தின் பிரதோஷமான நேற்று பெருவுடையார்க்கு ஏற்ற மஹாநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.