Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் ... நவராத்திரி ஐந்தாம் நாள்: மோகினி அலங்காரதில் அம்பிகையை வழிபட கேட்டது கிடைக்கும்; நினைப்பது நடக்கும். நவராத்திரி ஐந்தாம் நாள்: மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி ஐந்தாம் நாள்: தபசு திருக்கோலத்தில் மதுரை மீனாட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி ஐந்தாம் நாள்: தபசு திருக்கோலத்தில் மதுரை மீனாட்சி

பதிவு செய்த நாள்

15 அக்
2026
07:10

மதுரை மீனாட்சியம்மன் இன்று தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

நாக அரசர்களான சங்கன் சிவபக்தனாகவும், பதுமன் திருமால் பக்தனாகவும் இருந்தனர். இருவருக்கும் இடையே சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என போட்டி எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். சிவனும், திருமாலும் சமமானவர்கள் என்பதை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என பார்வதி விரும்பினாள்.

இதற்காக ஊசிமுனையின் மீது ஒற்றைக்காலில் நின்று கடும்தவம் புரிந்தாள். அவளைக் காண தேவர்கள் எல்லாம் பசுக்களின் வடிவில் பூமிக்கு வந்தனர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் ‘ஆவுடையம்மாள்’ எனப்பட்டாள்.

பூமிக்கு வந்து விட்ட பார்வதியின் முகம் மதி (நிலா) போல பிரகாசித்தது. இதன் காரணமாக கோமதி எனப்பட்டாள். சிவனும், திருமாலும் இணைந்து சங்கர நாராயணராக காட்சியளிக்க காரணமாக இருந்தவள் பார்வதி. அவளின் தவக்கோலத்தை தரிசித்தால் ஞானம், வைராக்கியம் உண்டாகும்.

பாட வேண்டிய பாடல்

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar