பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 10:10
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி உற்சவம், கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, 19ம் தேதி வரை தினசரி காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், சுதர்சன மகா மந்திர ஜெப ஹோமமும் நடந்து வருகிறது. இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கி 12:00 மணி வரை ஹோமங்களும், ஆயிரக்கணக்கான கிலோ பழங்களுடன், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. மூலவர் லட்சுமி நரசிம்மர் சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், வெள்ளிக்கவசத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு யாகமும் நடந்தது. நிறைவாக 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுதர்சன மகா மந்திர ஹோமம், விசேஷ யாகமும் நடக்கிறது.