புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பக்தி பஜனை நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2026 10:10
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி முன்னிட்டு பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் துவங்கி நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஹயக்ரீவ ஹோமம், 10:30 மணி முதல் 12:30 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடந்தது. மாலை சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை பிரிட்ஜ் அகடாமி குழுவினரின் பரதம் நாட்டியம், சுமதி சுந்தர் குழுவினரின் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.