பாலக்காடு மேலாமுறி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி கொலு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2026 10:10
பாலக்காடு: பாலக்காடு, மேலாமுறி பெரியமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது.
அங்கு, 10 அடிக்கும் மேலான பிரம்மாண்ட கொலு விக்கிரகங்களை வடிவமைத்துள்ளனர். தேவியுடன் கணபதி மற்றும் சுப்ரமணிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒன்பது நாட்களும், தினமும் வெவ்வேறு அவதாரங்களில் அம்மன் அருள்பாலிக்கிறார். குறிப்பாக, விதவிதமான பலகாரங்கள் மற்றும் உணவு பதார்த்தங்களை நிரப்பி படைக்கப்படும் கடோத்கஜன் அலங்காரம், ரூபாய் நோட்டுகளாலும், தங்க நகைகளாலும் அலங்கரிக்கப்படும் ‘கனகதாரா அலங்காரம்’ மற்றும் ‘ஸ்ரீராம பட்டாபிஷேகம்’ உள்ளிட்ட விசேஷ அலங்காரம் அடுத்தடுத்த நாட்களில் நடக்கிறது. நவராத்திரி நிறைவு நாளில், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மகிஷாசுரனை வதம் செய்யும் பாரம்பரிய நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.