Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியில் இரு நாட்கள் நடைபெறும் 12 ... பழநி இடும்பன் கோயில் நகை திருடிய இருவர் கைது பழநி இடும்பன் கோயில் நகை திருடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘அ’னா, ‘ஆ’வன்னா .. மழலையரே... மகிழ்வுடன் வாங்க! 20ல் ‘தினமலர்’ சார்பில் ‘வித்யாரம்பம்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
‘அ’னா, ‘ஆ’வன்னா .. மழலையரே... மகிழ்வுடன் வாங்க! 20ல் ‘தினமலர்’ சார்பில் ‘வித்யாரம்பம்’

பதிவு செய்த நாள்

16 அக்
2026
11:10

திருப்பூர்: மழலை விரல்கள் அரிசியில் பதிக்கும் முதல் எழுத்து... வாழ்வின் ஏடுகளைத் திறக்கும் முதல் திறவுகோல்! பிஞ்சு மனதில் கல்வி விதை விழும் அந்த நொடி, பெற்றோரின் கனவுகளும் நம்பிக்கைகளும் சிறகடிக்கத் தொடங்குகின்றன. அறிவையும் பண்பையும் நோக்கிய குழந்தைகளின் முதல் பயணத்தை, இறையருளுடனும் பெரியோரின் ஆசியுடனும் தொடங்கி வைக்கும் இனிய தருணம் இது! அந்தப் புனிதமான அனுபவத்தை மழலைச் செல்வங்களுக்கு வழங்கும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் மற்றும் ஸ்ரீசக்தி இன்டர்நேஷனல் பிளே ஸ்கூல் இணைந்து வழங்கும் ‘அரிச்சுவடி ஆரம்பம்’ வித்யாரம்பம் நிகழ்ச்சி, வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. அவிநாசி, ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.


விஜயதசமி நன்னாள்: துர்கா தேவி அசுரனை வதம் செய்து வெற்றியை நிலைநாட்டிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி, தீமைகள் அகன்று நன்மைகள் மலரும் நன்னாளாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளின் கல்விப் பயணத்தைத் தொடங்கினால், அறிவும் ஆற்றலும் பெருகி வாழ்வில் வெற்றி கிடைக்கும் என்பது முன்னோர் நம்பிக்கை. இந்த மரபைப் போற்றும் வகையில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரையிலான குழந்தைகளுக்கு அரிசியில் முதல் எழுத்தை எழுத வைத்து, கல்வியின் அரிச்சுவடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ‘தினமலர்’ நாளிதழ் ஆண்டுதோறும் முற்றிலும் இலவசமாக நடத்தி வருகிறது.


கல்விப்பயணம்: அதன்படி, வரும் 20ம் தேதி காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, அவிநாசி, ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து ஆசி வழங்கும் நிகழ்ச்சியில், அவிநாசி காமாட்சி தாச சுவாமிகள், ஸ்வாமினி மஹாத்மானந்த சரஸ்வதி, ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் டிரஸ்ட் நிறுவனர் ஞானகுரு, கிளாசிக் போலோ செயல் இயக்குனர் சிவராம், ஸ்ரீசக்தி பள்ளி சேர்மன்கள் தங்கவேல், தீபன் தங்கவேல், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஹர்ஷினி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். செல்லக் குழந்தைகளுக்கு முதல் எழுத்தை அறிமுகப்படுத்தி, கல்விப் பயணத்தை மங்கலமாகத் தொடங்க விரும்பும் பெற்றோர், இந்த இலவச நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்களுடன் 96887 53040 என்ற எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.


முதல் எழுத்து...:  வாழ்நாள் நினைவு


குழந்தையின் கல்விப் பயணத்தில் முதல் எழுத்து எழுதும் தருணம், பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகும். விஜயதசமி நன்னாளில் பெரியவர்களின் ஆசியுடன் அரிசியில் ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதுவது, கல்வியின் மீது குழந்தைக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஓர் அழகிய தொடக்கமாக அமையும். இந்த இனிய அனுபவத்தைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளும் வகையில், ‘தினமலர்’ நாளிதழின் ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar