காஞ்சியில் இரு நாட்கள் நடைபெறும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் துவங்கியது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2026 10:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், இரு நாட்கள் நடைபெறும் 12 ஜோதிர்லிங்க தரிசனம் காட்சி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பக்தர்கள், லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், 12 ஜோதிர்லிங்க கோவில்களில் உள்ள மூலவரின் சிவலிங்க தரிசன காட்சி, காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாய கூடத்தில் நேற்று தொடங்கியது. இதில், தரிசனத்தை காண வரும் பக்தர்கள், வாசனை திரவியம் கலந்த அபிஷேக திரவியத்தால், 12 லிங்கத்துக்கும் அபிஷேகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்கள் நடைபெறும் தரிசன காட்சியை, ஹிந்து முன்னணியின் மாநில பொது செயலர் மணலி மனோகரன் நேற்று தொடங்கி வைத்தார். இதில், திரளான பக்ததர்கள் ஜோதிர்லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இன்று காலையும் 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஜோதிர்லிங்க தரிசனம் நடைபெறுகிறது.