விழுப்புரம் அஷ்டவராகி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு யாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2026 11:10
விழுப்புரம்: விழுப்புரம் அஷ்டவராகி அம்மன் கோவிலில், நவராத்திரி வழிபாடும், பஞ்சமி திதி யாகமும் நடந்தது.
விழுப்புரம் சாலாமேடில் உள்ள அஷ்டவராகி அம்மன் கோவிலில், புரட்டாசி நவராத்திரி சிறப்பு வழிபாடு கடந்த 10ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 6 ம் நாள் நவராத்திரி வழிபாடும், வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி யாகமும் விமரிசையாக நடந்தது. மாலை நடந்த சிறப்பு யாகத்தில், கொல்லிமலையில் இருந்து வர வைக்கப்பட்ட மூலிகையும், 9 விதமான அன்னம், 10 சேலைகளும் பக்தர்களால் யாகத்தில் கொடுக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த வராகி அம்மனனை பக்தர்கள் பல்லாக்கில் சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். தீபாரதனைகள் முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.