Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் விளக்குகள் பழுது; இருளில் பக்தர்கள் சிரமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கடற்கரை கோவில் விளக்குகள் பழுது;  இருளில் பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

16 அக்
2026
04:10

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மின் விளக்குகள் பழுதடைந்து இருளில் மூழ்கியதால், சுற்றுலா பயணியர், பக்தர்கள் தடுமாறுகின்றனர்.


மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கது கடற்கரை கோவில். இங்கு ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு மற்றும் குடைவரை கோவில்கள் உள்ளன. கடற்கரை கோவிலை பகலில் மட்டுமின்றி, இரவில் மின்னொளியிலும் காண, இரவு 9:00 மணி வரை சுற்றுலா பயணிருக்கு சுற்றுலாத் துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், கடற்கரை கோவில் வளாகத்தில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மின் விளக்குகள் பழுதடைந்து அப்பகுதி முழுதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் சுற்றுலா பயணியர் தங்கள் மொபைல் போன் வெளிச்சத்தில், பாறை ஓவியங்களை காண்கின்றனர். இருள் சூழ்ந்த பகுதிகளில் பாறைகற்களில் இடறியும், பாதையில் நடக்க முடியாமல் சுற்றுலா பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் வளாகத்தில், பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க சுற்றுலா துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar