லித்தானியா சேர்ந்த மோரிஸ்42, இங்கிலாந்து சேர்ந்த ஒலிவியா35, இருவரும் லண்டனில் வேலை பார்த்த நிலையில் காதலித்தனர். இவர்கள், இந்திய கலாச்சாரம், சமய வழிபாடு குறித்து தெரிந்து கொள்ள புனித தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க திட்டமிட்டனர். அதன்படி அக்.,5ல் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்ட காதலர்கள் இருவரும் அக்.,9ல் சென்னை வந்திறங்கினர். பின் சென்னையில் ஒரு பழைய ஆட்டோவை விலைக்கு வாங்கி இன்ப சுற்றுலா புறப்பட்டு மகாபலிபுரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து கோயில் பிரகாரங்கள் மற்றும் தனுஷ்கோடி சுற்றுலா பகுதிகளை கண்டு ரசித்தனர். இதன்பின் திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி மற்றும் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், உ.பி.,க்கு சென்று அங்குள்ள புனிதம் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து 6 மாதம் ஆட்டோவில் சுற்றி வர உள்ளதாகவும், பின் டில்லியில் இருந்து விமான மூலம் லண்டன் திரும்ப உள்ளதாக காதலர்கள் தெரிவித்தனர்.