புரட்டாசி கடைசி சனி: தீப ஒளியில் ஜொலித்த பிரசன்ன வெங்கடேச பெருமாள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 10:10
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை முன்னிட்டு தீப ஒளியில் பெருமாள் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது, கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவதானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் தஞ்சை திருப்பதி என்று அழைக்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது, இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கு திருப்பதியில் ஒரு நாள் அலங்காரம், தீப ஒளியில் பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபஆரத்தி காட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு மனமுருக வேண்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.