பெரிய காஞ்சிபுரத்தில் அன்னை ரேணுகாம்பாளுக்கு கோலாகலமாக நடந்த சீமந்த விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 11:10
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா நடத்தப்பட்டது.
பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பில் அன்னை ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 10ம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இதில், தினமும் காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஆறாவது நாளான நேற்று, அம்மனுக்கு சீமந்த விழா நடந்தது. இதில், குழந்தை பேறு வேண்டி, திருமணமான பெண்கள், அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். வரும் 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரம் நடைபெற உள்ளது.