கோவில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பூஜை சிறுவர், சிறுமியர் உற்சாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 12:10
சூலூர்: சூலூர் வட்டாரத்தில் கோவில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பூஜை பக்தி பரவசத்துடன் நடக்கிறது.
சூலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் நவராத்திரி பூஜையும், கொலு பூஜையும் கடந்த, 11 ம்தேதி துவங்கின. சூலூர் சிவன் கோவில், காடாம்பாடி சாந்த சிவகாளியம்மன் கோவில் மற்றும் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி பூஜைகள் நடக்கின்றன. சாந்த சிவகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, நடக்கும் கொலு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். கடவுள் உருவம் தரித்து சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். வினோபாஜி நகரில் நடந்த நவராத்திரி கொலு பூஜை காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் பங்கேற்று வழிபட்டனர். சொற்பொழிவுகள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.