சென்னை வெங்கடேச பெருமாள் கோவிலில் கருடசேவை உத்சவம் விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 12:10
சென்னை: தி.நகர் வெங்கடேசப் பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் நேற்று மாலை, கருட சேவை உத்சவம் விமரிசையாக நடந்தது.
தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமலையில் நடப்பது போல இக்கோவிலிலும் ஆண்டுதோறும் பிரம்மோத்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. பிரம்மோத்சவத்தை முன்னிட்டு கடந்த 11ம் தேதி மாலை அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தது. பிரதான நாளான நேற்று காலை பெருமாள் மோஹினி அவதாரத்திலும் மாலை கருட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். இவ்வைபத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.