திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 12:10
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டி பூஜை நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதியிலும்,வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.