Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... துர்கா பூஜையில் மகா சப்தமி: இயற்கையை வழிபடும் நவபத்ரிகா ஸ்நானம்! துர்கா பூஜையில் மகா சப்தமி: இயற்கையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொல்லியல் துறையினரின் பார்வை படுமா?: பழைமை வாய்ந்த கோட்டை, கொத்தளங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொல்லியல் துறையினரின் பார்வை படுமா?: பழைமை வாய்ந்த கோட்டை, கொத்தளங்கள்

பதிவு செய்த நாள்

17 அக்
2026
12:10

ரெகுநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து 17 கி.மீ.,ல் உள்ள ரெகுநாதபுரத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய கோட்டை, கொத்தளங்கள் நிறைய இருந்துள்ளன. அதற்கான வரலாற்று எச்சங்கள் மிஞ்சிய நிலையில் தொல்லியல் துறையினரின் பார்வை படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ரெகுநாதபுரம் பல்வேறு பழமையான சிறப்பம்சங்களையும் வரலாற்று சூழல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய கோட்டை கொத்தளங்களின் ஒரு பகுதி இன்றும் தனது எச்சத்தை மிச்சங்களாக கொண்டுள்ளது. சிறிய அளவிலான செங்கல் சித்துக்கல் மூலம் 15 அடி உயர கோட்டை சுவர் அமைந்துள்ளது. வரலாற்று ஆர்வலரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மங்களநாதன் 73, கூறியதாவது: கடந்த 400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு ரெகுநாதபுரம் அருகே உள்ள கொல்லன் தோப்பு, படை வெட்டி வலசை, நையினாமரைக்கான் போன்ற ஊர்கள் தொன்மையாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்களில் சிறப்பாக பேசப்படும் போர் கருவிகளை உருவாக்கி குவித்து வைத்த கோட்டை இங்கு தான் உள்ளது.


கொத்தளத்தை சுற்றிலும் கொல்லர்கள் கூட்டமாக தங்கள் பட்டறைகளில் படைக்கலன்களாகிய வாள், ஈட்டி போன்ற கருவிகளை செய்து அவற்றை காளி தேவியின் முன் படைத்து வழிபட்டு வந்தனர். அந்த பண்டைய மரபு அடையாளம் கொல்லன் வீட்டு காளி என்ற பெயரில் அழியாமல் இன்றும் காலம் கடந்து நிலைத்து நிற்கிறது. கி.பி., 1625ல் நடந்த மைசூர் போரில் தோற்ற மைசூர் மன்னர், மதுரை திருமலை நாயக்கரை வீழ்த்த கி.பி.,1656ல் நடந்த போர் தான் மூக்கறுப்பு போராகும். அந்தப் போரில் துணை நின்று 35 ஆயிரம் படை வீரர்களை திரட்டி திண்டுக்கல் கோட்டையில் தஞ்சம் புகுந்த பத்தாயிரம் எதிரிகளை வெட்டி சாய்த்து மைசூர் வரை விரட்டிச் சென்று மைசூரை வென்று மதுரையை மன்னர் திருமலை நாயக்கரிடம் மீட்டுக் கொடுத்த பெருமை வாய்ந்தவர் ரெகுநாத கிழவன் சேதுபதி. அத்தகைய படைகளை திரட்டிய ஊர் தான் படைவெட்டி வலசை. 


பெரியபட்டினத்தின் வரலாற்று பெயர் பவுத்திரம் பட்டினம். முத்துப்பேட்டை கடலோர ஊராகும். அரபு வணிகம் சிறந்த துறைமுக பட்டினங்கள் ஆகும். கடல் கடந்த அரேபியர்கள் குதிரைகளை இறக்குமதி செய்து வைகை கிளை ஆற்றில் படகுகள் மூலம் மதுரை சென்று வந்தனர். அந்த குதிரைகளை வகைப்படுத்தி சேதுபதிகள் படையில் சேர்த்துக் கொண்ட இடம் ரெகுநாதபுரம் கொத்தளத்தின் வெளிப்பகுதியாகும். ராமநாதபுரத்தை தலைநகராக கொண்டு சேதுபதிகள் ஆள்வதற்கு முன்பு சத்திரக்குடி அருகே போகலுாரில் சேதுபதிகளின் தலைநகரம் இருந்துள்ளது. ஆற்றுப்பகுதியை ஒட்டியே நகரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியியல் மற்றும் வரலாற்று தொல்லியல் வல்லுநர்கள் இப்பகுதிகளை ஆய்வு செய்து அழகன்குளம், கீழடி போன்று வைகை ஆற்றங்கரை தமிழர் நாகரிகம் நிறைந்த முற்கால தொன்மங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar