Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் ராமர் ... கமுதியில் பாரம்பரிய மகேஸ்வர பூஜை: வைத்து சிறப்பு பூஜை கமுதியில் பாரம்பரிய மகேஸ்வர பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிவார பூஜை: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிவார பூஜை: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

17 அக்
2026
05:10

தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


பெரியகுளம்: அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், கணேச கந்தா பெருமாள் கோயில், பழனிசெட்டிபட்டி பெருமாள் கோயில், பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு எம்பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், நடைபெற்றன. இவ்வாண்டின் இறுதி புரட்டாசி சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயில்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து துளசி மாலை, பூக்கள் வழங்கி சாமி தரிசனம் செய்தனர்.


வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு சுப்ரபாதம் சேவை துவங்கியது. பால், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், ஜவ்வாது உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பாவை சேவித்தல், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் வரதராஜப்பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், மகாலட்சுமி அம்மன் திருச்சானூர் அலமேலு மங்கை அலங்காரத்திலும்,உற்ஸவர் கருட சேவை வாகனத்திலும் காட்சியளித்தார். பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்,ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாமரைக்குளம் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar