கமுதியில் பாரம்பரிய மகேஸ்வர பூஜை: வைத்து சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 05:10
கமுதி: கமுதியில் ராமானுஜ பஜனை மடம் சார்பில் 1915ம் ஆண்டு முதல் பாரம்பரிய முறைப்படி புரட்டாசி மாதத்தில் காலையில் தெருக்களில் ஊர்வலமாக சென்று வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி மக்களிடம் அரிசி, தானியங்கள் பெறப்பட்டு புரட்டாசி மாதம் 5வது சனிக்கிழமை மகேஸ்வர பூஜை நடைபெறுவது வழக்கம். ராமானுஜ பஜனை மடத்தில் இந்த ஆண்டு 111ம் ஆண்டு மகேஸ்வர பூஜை நடந்தது. பஜனை குழு சார்பில் தானியமாக பெறப்பட்ட அரிசியில் அன்னதானம் செய்யப்பட்டு அன்னக்குவியலுக்கு மலர் மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. பின் அதனை மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையை கவுரவ செட்டியார் உறவின் முறை டிரஸ்டிகள், ராமானுஜ பஜனை குழு, கவுரவ இளைஞர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் செய்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மகேஸ்வர பூஜை தொடர்ந்து பாரம்பரியமாக நடக்கிறது.