சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 06:10
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது . இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு அர்ச்சனை நடந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இதே போல் செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாள், செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.