பட்டீஸ்வரர் கோயிலில் தேவாரம் பாடி ஒரு மணி நேரம் பேருரை; பேரூர் கோயிலில் சிறுமி ஸ்ரீநிதி பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2026 07:10
பேரூர்: பட்டீஸ்வரர் கோயிலில் 13 வயது சிறுமி தேவார பாடல்களின் சிறப்பு குறித்து, ஒரு மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தி பக்தர்களை பிரமிக்க வைத்தார்.
பி.என். புதுரை சேர்ந்தவர் ஆழ்வார் ஸ்ரீநிதி. 3 வயது முதலே, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை, 280 நிகழ்ச்சிகளில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தி உள்ளார். 250 விருதுகள் பெற்றுள்ளார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, சித்தமெல்லாம் சிவமயம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சிவனின் ஐந்து முகங்கள் குறித்தும், கடவுளை எவ்வாறு வழிபட வேண்டும் என்றும் பேசினார். தேவார பாடல்களை பாடி, ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறி அசத்தினார். “தமிழ் சமூகம் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் தேவார பாடல்கள். அதை பாடுவதை மறந்து வருகிறோம். பாடுகிறோமோ இல்லையோ, கேட்கவாவது வேண்டும். அப்போதுதான், தேவார பாடல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும்” என்றார். ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழலை குரலில், முக பாவனை மாற்றங்களுடன் குரலை ஏற்றி இறக்கி ஆழ்வார் ஸ்ரீநிதி ஆற்றிய சொற்பொழிவை, பக்தர்கள் மெய்மறந்து கேட்டு ரசித்தனர்.