Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12ம் நுாற்றாண்டு பெருமாள் கோவில் ... பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு சுத்தம் செய்யும் இயந்திரம் வழங்கல் பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யானைகளின் அணிவகுப்புடன் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம்

பதிவு செய்த நாள்

18 அக்
2026
11:10

பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.


கேரள மாநிலம், பாலக்காட்டில், கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடந்தது.


அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், தொடர்ந்து ‘வாகச்சார்த்து’ என்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை, 7:10 மணிக்கு உற்சவ அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு, உணவளிக்கும் ‘யானையூட்டு’ நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து, கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து, முத்துமணி குடை சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில், ‘காழ்ச்ச சீவேலி’ நிகழ்வு நடந்தது. அதன்பின், காலை, 10:30 மணிக்கு பெருவனம் குட்டன் மாரார் தலைமையில், 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற, ‘பஞ்சாரிமேளம்’ நிகழ்வு நடந்தது. இதை ஏராளமானோர் கண்டுரசித்தனர். மாலை, 3:30 மணிக்கும் ஐந்து யானைகள் அணி வகுப்பில் ‘காழ்ச்ச சீவேலி’ நிகழ்வு நடந்தது. அதன் பின், நிறமாலை தரிசனம், நாதஸ்வர கச்சேரி, கேரளா பாரம்பரிய நடனமான மோகினியாட்டம், உற்சவர் எழுந்தருளும் வைபவம் நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar