திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி சந்திரப்பிரபை வாகனத்தில் நர்த்தன கிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிலவொளியின் குளிர்ச்சியைப் போன்ற தெய்வீகப் பொலிவுடன், புல்லாங்குழல் இசைத்து நடனமாடும் கிருஷ்ணரின் திருக்கோலத்தில் காட்சியளித்த சுவாமியைத் தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர். சந்திரப்பிரபை வாகனம் அமைதி, சாந்தம் மற்றும் ஆன்மிகப் பேரின்பத்தின் அடையாளமாக விளங்குகிறது. சிவபெருமானின் சடையில் சந்திரன் அணிகலனாகத் திகழ்வதைப் போல, திருமாலின் வாகன சேவையில் சந்திரனின் அம்சம் இடம்பெறுவது ஹரி–ஹர ஒற்றுமையை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது. இந்த வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.