Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பிரம்மோற்சவம்: ... பழநி முருகன் கோவிலில் கலசநீரில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பழநி முருகன் கோவிலில் கலசநீரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை: கலைவாணியை வழிபடுவோம்.. கல்வி, தொழிலில் வளம் பெறுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை:  கலைவாணியை வழிபடுவோம்.. கல்வி, தொழிலில் வளம் பெறுவோம்!

பதிவு செய்த நாள்

19 அக்
2026
07:10

நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று வழிபட வேண்டும். பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி வெள்ளைத் தாமரையில் சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள். இன்று வீட்டில்  சரஸ்வதி படத்தை பூக்களால் அலங்கரித்து  விளக்கேற்றி பொரி, சுண்டல், பழம், பாயாச வகைகளைப் படைத்து வழிபட வேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகம், எழுதுபொருட்களை கலைமகளாகக் கருதி சந்தனம், குங்குமமிட்டும், தொழிலாளர்கள் தங்களின் கருவி, ஆயுதங்களை சுத்தம் செய்து அலங்கரித்து பூஜை செய்து வழிபட வேண்டும். 


சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.  படத்தின் முன் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.


நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.


வீட்டில் சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9:00 – 10:00 மணி. அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்..!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
அயோத்தி, விஜயதசமியை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், ஆன்மிகச் ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னையில் வழிபாடு செய்யப்பட்ட துர்கா சிலைகள் சென்னை காசிமேடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar