பழநி முருகன் கோவிலில் கலசநீரில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2026 08:10
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.