* உலகில் பணமே முக்கியம். பணத்தால் தான் எல்லாம் இயங்குகிறது. * பிறர் செய்த உதவியை மறந்தவர்களுக்கு நரகமே கிடைக்கும். * வறுமை, நோய், கஷ்டம், சிறைவாசம் போன்றவை அவரவர் செய்த பாவத்தின் விளைவு. * நல்லவர்கள் சொல்லும் கடுஞ்சொற்கள் நல்ல வாழ்வு தரும். * கெட்டவர்கள் தவறான பாதையில் செல்வார்கள். * நட்சத்திரங்களுக்கு அணிகலன் சந்திரன். மனைவிக்கு அணிகலன் கணவன். * அளவாக சாப்பிடும் மனநிலையை வளர்த்துக்கொள். * பயமும், தயக்கமும் தோல்விக்கான அறிகுறி. * ஆற்றுநீர் போல் ஒரே திசையை நோக்கி முன்னேறு. * மது அருந்துபவன் அறிவு, உறவினர், நண்பர்களை இழப்பான். * சந்தேகத்துடன் ஒரு செயலை தொடங்கினால் சங்கடத்தில் முடியும். * இக்கட்டான சூழல் வந்தால் உறவினர், நண்பர்களின் உண்மையான முகத்தை அறியலாம்.