Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெங்களூரு வாழும் கலை மையத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ‘அரவணை’ பிரசாதம் பெற 2 மணி நேரம் பக்தர்கள் தவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ‘அரவணை’ பிரசாதம் பெற 2 மணி நேரம் பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

19 அக்
2026
10:10

பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்த நிலையில், அக்கோவிலில் நேற்று வழிபட சென்ற பக்தர்கள் பிரசாதத்தை பெற இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலம், நவ., 17ல் தொடங்குகிறது. மாத பூஜைக்காக கடந்த 18ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி, காங்.,கைச் சேர்ந்த தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன், “அரவணை பிரசாத தயாரிப்புக்கான அரிசி கொள்முதல் ஒப்பந்தத்தை தேவஸ்வம் போர்டு இதுவரை இறுதி செய்யவில்லை” என, குற்றஞ்சாட்டினார்.


இதற்கு பதிலடியாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயக்குமார், “சபரிமலையில் போதுமான அளவு அரவணை கையிருப்பில் உள்ளது. நாளொன்றுக்கு 1.5 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்படுகிறது” என, குறிப்பிட்டார்.


இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு நேற்று வழிபட வந்த பக்தர்கள், அரவணை பிரசாதம் பெற குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வரை நீண்டவரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். இந்தப் பிரசாதம் வழங்கப்படும் கவுன்ட்டர்களில், மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டிருந்ததால், இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சபரிமலையில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரத்தைவிட, அரவணை பிரசாதம் பெறவே அதிக நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar