மதுரையில் ‘அ’கரம் தொடங்கிய மழலைகள் கல்விப் பயணத்தின் முதல் புள்ளி: நெகிழ்ந்த பெற்றோர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2026 11:10
மதுரை: விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று காலை 8.50 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது.
ஆண்டு தோறும் தினமலர் சார்பில் வித்யாரம்பத்துக்கு உகந்த நாளான விஜயதசமி திருநாளில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு விஜயதசமி நாளான இன்று தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கான அனா, ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடத்தியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று காலை 8.50 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்து, தாம்பூல தட்டில் நிரப்பியிருந்த பச்சரிசியில் முதலில் ஓம் அடுத்து அ என எழுதி குழந்தைகளின் கற்றலை இனிதே துவங்கினர். அவர்களுக்கு தேவையான பூஜை பொருட்கள் தாம்பூலம், பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், வெத்தலை பாக்கு என அனைத்தும் தினமலர் மற்றும் மஹன்யாஸ் சார்பில் வழங்கப்பட்டது.