கோவை லலிதாம்பிகை கோவிலில் கமல தாரணி சிறப்பு பூஜை: ராம சாய் பாபா பிரதிஷ்டை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2026 01:10
கோவை: பெரியதடாகம் லலிதாம்பிகை திருக்கோவிலில் கமல தாரணி சிறப்பு அலங்கார. பூஜை ஸ்வாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. புதிதாக ஸ்ரீ ராம சாய் பாபா பிரதிஷ்டையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை பெரிய தடாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை திருக்கோவிலில் கமல தாரணி சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு இன்று காட்சியளித்தார். ஸ்வாமி ஜகமானந்தா சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நவராத்திரி நிகழ்வின் பத்தாவது நாளான இன்று விஜயதசமி நாளில் மகாலட்சுமி அலங்காரத்தில் தாமரைப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் அதை தொடர்ந்து கமலா தாரணி அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் லீலாவதி சம்பத்குமார். சரவணன். பிரசாந்த் பண்டிட். மனோ பண்டிட். ஒருங்கிணைப்பாளர் கணேஷ் . பாபு. ரவி.உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி அருளாசி வழங்கி கூறியதாவது; நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலவிட லலிதாம்பிகை திருக்கோவிலில் தொடர்ந்து பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறோம். இன்று நவராத்திரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் ஒற்றுமையோடு மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இதேபோல் இந்த ஆன்மீக அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களும் ஏழை மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி குழந்தைகள் பயன்படும் வகையில் செயல்படுத்தி வருகிறோம். விஜயதசமி நாளில் லலிதாம்பிகை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வாழ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. லலிதாம்பிகை திருக்கோவில் எதிரே பாபா திருக்கோவில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பாபா அருள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.நிகழ்ச்சியில் கோத்தகிரி ஓம் நமோ நாராயணா நாம கீர்த்தனா குழுவினரின் பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.