மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் விஜயதசமி; வித்தியாரம்பம் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2026 02:10
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதீன மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் குழந்தைகளின் நாவில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத செய்து கல்வியை தொடங்கி வைத்து ஆசி வழங்கினார்.
பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. தருமை ஆதீனத்தின் அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக தருமபுரம் ஆதீன மடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆதின பூஜை மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குழந்கைகளின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத செய்து அக்ஷராபியாசம் ஆரம்பக் கல்வியை தொடக்கி வைத்து இனிப்பு கொடுத்து அருளாசி வழங்கினார். இதில் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.