* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும். * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது உணரப்படுவது. * உண்ணும் உணவு உடலில் மட்டுமே பாயும். எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும். * பிறர் தவறு செய்யும் போது உடனே புத்தி சொல்லாதீர். * அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர். * சில நேரத்தில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும். * பிறர் செய்யும் செயல்களைத் தவறாக புரிந்து கொள்ளாதீர். * வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருக்கிறான். * மற்றவரை விட உயர்ந்தவன் என கர்வப்படாதீர். * பண்பில்லாத சொற்களை பயன்படுத்தாமல் இருங்கள். * தயக்கம், பயத்தால் உண்மையை பேசாமல் இருக்காதீர். * நடத்தையில் மிடுக்கு காட்டுவதை தவிர்ப்பீர். * எல்லோரிடமும் எல்லா விஷயத்தையும் பகிர வேண்டாம். * திருப்தி என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது. * கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் நம்பாதீர்.