Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாழ்க வளமுடன்: வேதாத்ரி மகரிஷி பக்தர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளிக்கும் அம்மன் பக்தர்களின் கேள்விக்கு எழுத்து ...
முதல் பக்கம் » துளிகள்
ஹம்பியில் அருள் தரும் விருபாக்ஷேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹம்பியில் அருள் தரும் விருபாக்ஷேஸ்வரர்

பதிவு செய்த நாள்

27 அக்
2026
12:10

கர்நாடகாவின் ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில், ஹம்பி உள்ளது. இது, ‘யுனெஸ்கோ’ பட்டியலில் இடம் பெற்ற பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். அத்துடன் ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. இங்கு பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. இவற்றில் விருபாக்ஷா கோவிலும் ஒன்றாகும்.

விஜயநகர பேரரசர் இரண்டாம் தேவராயரின் ஆட்சியில், அவரது தளபதியாக இருந்த லக்கண தன்டேஷா உதவியுடன், விருபாக்ஷா கோவில் கட்டப்பட்டது. தினமும் கோவிலில் பூஜை நடக்கிறது. துங்கா ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள சிவன் விக்ரகம், 9ம் நுாற்றாண்டில் செதுக்கப்பட்டது என, நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் கோவில் மிகவும் சிறிதாக இருந்தது. அதன்பின் விஜயநகர பேரரசர் ஆட்சியில், அற்புதமான கட்டட கலையில் பெரிதாக கட்டப்பட்டது.

கோவிலின் துாண்கள், அதன் மீது செதுக்கப்பட்ட சிற்பங்கள், கலை நயமான மேற்கூரை என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. கோவிலின் கிழக்கு கோபுரம், மூன்று அடுக்குகள் கொண்டுள்ளது.

வடக்கு கோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டதாகும். கோவிலை சுற்றிலும் மண்டபங்கள் உள்ளன. கோவில் முன்பாக மண்டப வடிவில், வர்த்தக மையம் இருந்துள்ளது. அதன் இடிபாடுகளை இன்றைக்கும் காணலாம்.

சம்பிரதாயப்படி பூஜைகள் நடக்கின்றன. சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திங்கட் கிழமைகள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். ஹம்பிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், விருபாக்ஷா கோவிலை பார்த்து ரசிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகிலுள்ள தம்பரஹள்ளியில் உள்ள மலை மீது, பண்டி ரங்கநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
துமகூரின் திப்டூர் தாலுகா தாசரி கட்டா கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
* வாழ்க வளமுடன் என்று சொன்னால் மனம், உடல் பலம் பெறும்.  * அறிவு என்பது அறியப்படுவது. ஞானம் என்பது ... மேலும்
 
temple news
* கடந்ததை மறந்திடு. வாழ்வை புதிதாக தொடங்கு. இனி எல்லாம் சுகமாகும். * தர்ம பாதையில் நடந்தால் அதுவே உனக்கு ... மேலும்
 
temple news
* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar