Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் வன்னி மர பாரி ... 11ம் நுாற்றாண்டு நடுகல் சிற்பம் காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு 11ம் நுாற்றாண்டு நடுகல் சிற்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களில் அம்பு எய்தல் வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில்களில் அம்பு எய்தல் வைபவம்

பதிவு செய்த நாள்

21 அக்
2026
01:10

திருப்புத்துார்


திருப்புத்துார் கோயில்களில் நவராத்திரி விழா நிறைவாக நேற்று நடந்த அம்மன் அம்பு எய்தல் வைபவத்தில் பக்தர்கள் தரிசித்தனர்.


திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் அக்.,11 ல் லட்சார்ச்சனையுடன் விழா துவங்கியது. தினசரி இரவு 7:00 மணிக்கு கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் அலங்காரங்களில் எழுந்தருள தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாளில் விளக்கு பூஜை நடந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் முன் அம்பு எய்தல் நடந்தது.

திருத்தளிநாதர் கோயிலில் அக்.,11 முதல் நவராத்திரி விழா துவங்கியது. தினசரி கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் அலங்காரங்களில் எழுந்தருள இரவு 7:45 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஆறாம் நாளில் அம்மன் சன்னதியில் விளக்கு பூஜை நடந்தது. நேற்று மாலை அம்மன் குதிரை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடாகி தேரோடும் வீதியில் அம்மன் எழுந்தருள அம்பு எய்தல் நடந்தது.

இளையாத்தங்குடி கைலாசநாதர் நித்தியகல்யாணி அம்மன் கோயிலில் அக்.,11ல் ஏகாந்த அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருள விழா துவங்கியது. தினசரி அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருள தீபாராதனை நடந்தது. நேற்று மாலை குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார். தொடர்ந்து கோயிலிலிருந்து புறப்பாடாகி அம்பாள் அம்பு போடுதல் நடந்தது. தினசரி கொலுவை தரிசிக்கவும், நேற்று அம்பாள் அம்பு எய்தலை தரிசிக்கவும் பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினசரி காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு திருமஞ்சனம்,தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலுவில் அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள உற்ஸவ அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

சிங்கம்புணரி: 


முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமி விழா நடந்தது.


இங்கு நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தார். விஜயதசமி நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வில் அம்புடன் புறப்பட்டார். நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார பொட்டலில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நெட்டப்பாக்கம்: 


சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் துர்காஷ்டமி விழா நடந்தது.


இதையொட்டி, காலை பால், இளநீர், தேன் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதில் முன்னாள் எம்.பி., தன்ராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

குன்னுார்: 


குன்னுார் அருகே உள்ள ஜெகதளா நீலமாரியம்மன் கோவில் நவராத்திரி பெருவிழா, கடந்த, 11ம் தேதி சிறப்பு வழிபாடுகளுடன் துவங்கியது.


தொடர்ந்து, 9 நாட்களும் துர்கை அம்மனின் நவ அவதாரங்களான சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகவுரி, சித்திதாத்ரி ஆகிய திருக்கோலங்களில் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. தினமும் மாலையில் அம்மன் திருவீதி பவனி, பக்தி பஜனைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடந்தன.

விழாவின் நிறைவு நாளான நேற்று, விஜயதசமியை முன்னிட்டு மகிஷாசுர வதம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். அசுரனை வதம் செய்யும் அடையாளமாக வாழை மரம் வெட்டும் வைபவம் பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் கோலாகலமாக அரங்கேறியது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar