Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழக அரசின் இலவச வேட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லிங்கமலையில் சிலுவை பராமரிப்பு ஹிந்து முன்னணி போலீசில் புகார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லிங்கமலையில் சிலுவை பராமரிப்பு ஹிந்து முன்னணி போலீசில் புகார்

பதிவு செய்த நாள்

24 அக்
2026
08:10

புதுக்கோட்டை: மலம்பட்டி லிங்கமலையை பாதுகாக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், புதுக்கோட்டை எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள லிங்கமலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இது மன்னர் அழகிய மணவாள தேவன் கட்டிய கோவில்.


சோழர்கால வரலாற்று சான்றுகளாக அரிய கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை, பழமையான மண்டபம், குன்றுகள் அமைந்திருப்பது அரசு ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல தலைமுறையாக பொதுமக்கள், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர். கோவிலின் தொன்மை, கல்வெட்டுகளை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது. லிங்கமலை உச்சியில் கிறிஸ்துவர்கள் சிலுவையை வைத்ததாகவும், குளத்துார் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான பேச்சில், ‘சிலுவை சட்டவிரோதமானது. இது ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மத்தியில் மத மோதலை உருவாக்கும் செயல்’ என, கூறப்பட்டது. மேலும், சிலுவையில் எந்த பராமரிப்பும் செய்யக்கூடாது; சிலுவை அகற்றப்பட வேண்டும் என்றும், வருவாய்த்துறை, காவல்துறை அனுமதியில்லாமல் இருதரப்பினரும் அங்கு எந்த ஒரு செயலும் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்துவர்கள் நேற்று முன்தினம் சிலுவையை பராமரித்து, பாதையை சுத்தம் செய்தபோது, போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டது. இது மதமோதல்களை துாண்டும் விதமாக உள்ளது. கடந்த காலங்களில் சிவன்கோவில் லிங்கமலை உள்ளே அத்துமீறி நுழைந்து, அங்குள்ள தொன்மையான கல்வெட்டுகளை உடைப்பது, பாதையை மறைப்பது போன்ற செயல்கள் நடந்தன. லிங்கமலை என்ற பெயரை சவேரியார்மலை என மாற்றும் முயற்சி இன்றளவும் நடக்கிறது. இவை அனைத்தும் மலையை ஆக்கிரமிக்கும் செயலாக தெரிகிறது. அப்பகுதியில் பிரச்னையை துாண்டி மத மோதலை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar