Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மாதா ... லிங்கமலையில் சிலுவை பராமரிப்பு ஹிந்து முன்னணி போலீசில் புகார் லிங்கமலையில் சிலுவை பராமரிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக அரசின் இலவச வேட்டியில் இருமுடி பை சபரிமலையில் ரூ.300க்கு விற்பனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழக அரசின் இலவச வேட்டியில் இருமுடி பை சபரிமலையில் ரூ.300க்கு விற்பனை

பதிவு செய்த நாள்

24 அக்
2026
08:10

பண்ருட்டி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த, அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 35. கணினி மைய உரியமையாளர். இவர், தன் நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், மணிகண்டன், ரமேஷ் ஆகியோருடன் கடந்த, 21ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.பம்பையில் கேரள அரசின் தேவஸ்வம்போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகளை நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாங்கினர். அந்த பை, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டியில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த வேட்டியில், தமிழக அரசின் முத்திரையுடன் பொங்கல் 2025ம் ஆண்டு, வேட்டி, சேலை வழங்கும் திட்டம், பதிவு எண், ரகம், தொகுப்பு எண், முகமை தமிழ்நாடு பஞ்சாலைக்கழகம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு இருமுடி பை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பையில் இரு தேங்காய், சந்தன பாக்கெட் 1, விபூதி பாக்கெட் 1, ஒரு கைப்பிடி பச்சரிசி ஆகியவை இருந்தன. தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய இந்த வேட்டி எப்படி வந்தது என்பது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் பக்தர்கள் கேட்டதற்கு, அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரளம், அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தது. இலவச வேட்டிகள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar