காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்தில் விஜய யாத்திரை: பூர்ணகும்பத்துடன் வரவேற்ற பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2026 04:10
குஜராத்: பூஜ்யஸ்ரீ ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சூரத்திற்கு இன்று காலை வருகை தந்தார். பக்தர்கள் பூர்ணகும்பத்துடன் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.
காஞ்சி பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் குஜராத்தில் இன்று 29 அக் முதல் நவம்பர் 20 வரை விஜய யாத்திரை துவங்கியுள்ளார். அதன்படி இன்று காலை (29 அக். 2026) சூரத்திற்கு வருகை தந்தார். சங்கராச்சாரியார் சுவாமிக்கு பக்தர்கள் பூர்ணகும்பத்துடன் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர். சூரத்தில் உள்ள ஸ்ரீ பத்ரிநாராயணன் மந்திரில் ஸ்வகதா சபை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஹோமம், பூர்ணாஹுதியில் சுவாமி பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து அனுகிரஹ பாஷாணம் மற்றும் பிரசாதம் வழங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.