Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் ... தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்: தெய்வீக ஒளியில் மிளிரும் ராம ஜென்மபூமி! தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

30 அக்
2026
10:10

விழுப்புரம்


வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுார்த்தி வழிபாடு நடந்தது.


விழுப்புரம், வடக்கு ரயில்வே குடியிருப்பில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவருக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சங்கடஹர சதுார்த்தியையொட்டி, சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பின், மாலை 6:00 மணிக்கு விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 6:30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள், பலர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருவாடானை


திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகர், பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார், திருத்தேர்வளை ஆண்டு கொண்டேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி மற்றும் கிராமங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது.


போடி


சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு போடி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு பிடித்தமான கொழுக் கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்தும், அருகம் புல் மாலை அணிவித்து சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


போடி 


புதூர் சங்கர விநாயகர் கோயில், குலாலர் பாளையம் விநாயகர், அணைப்பிள்ளையார், சந்தைப் பேட்டை விநாயகர், அக்ரஹாரம் விநாயகர், அமராவதி நகர் விநாயகர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள விநாயகரு க்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. விநாயகருக்கு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


செம்பட்டி


செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விநாயகருக்கு பால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


கள்ளக்குறிச்சி


அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.


சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை

சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar