வதோதராவில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரை: பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2026 11:10
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் இன்று காலை விஜயம் செய்தார். அவருக்கு பரமாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பக்தர்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அர்ஷ வித்யா மந்திரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம்காரேஸ்வர மகாதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோசாலைக்குச் சென்று பார்வையிட்ட சங்கராச்சாரியார் சுவாமிகள், அங்கு கூடியிருந்த துறவிகள் மற்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அனுக்கிரக பாஷணம் நிகழ்த்தி, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து தமது அருளுரையில், வேதங்களிலும் சமூகத்திலும் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து சங்கராச்சாரியார் எடுத்துரைத்தார். தர்மம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அறிவியலும் சாஸ்திரங்களும் இடையிலான தொடர்பு, பசுப் பாதுகாப்பின் அவசியம் மற்றும் தேசிய உணர்வு உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் விளக்கினார். ஆன்மிகம், தர்மம் மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துகளை வலியுறுத்திய அவரது அருளுரை, அங்கு திரண்டிருந்த துறவிகள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றது.