நந்தி ரூபத்தில் மஹாவிஷ்ணு சிவனை வழிபடும் தலம்: இங்கு ஒரு முறை நமசிவாய சொல்லி வழிபட செல்வ வளம் பெருகும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2026 10:11
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில் நாமம் உள்ளது. இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. இதை மால்விடை என்பர். திருப்பரங்குன்றத்தில் பெருமாளே சிவன் எதிரில் மால்விடையாக உள்ளார் என்பர். இத்தலத்தில் நமசிவாய, சிவாயநம மந்திரம் சொல்லி வழிபட வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்குப் பின் கயிலாய பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதன் பிரதோஷம்: சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.
நந்திக்கு நாமம்: மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில் நாமம் உள்ளது. இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. இதை மால்விடை என்பர். திருப்பரங்குன்றத்தில் பெருமாளே சிவன் எதிரில் மால்விடையாக உள்ளார் என்பர். கிரக ரீதியாகவோ, ஜாதகரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அது நீங்கவும், கல்வி அறிவில் சிறக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
புதுக்கோட்டை- ராமேஸ்வரம் ரோட்டில் 20 கி.மீ., தூரம். வடகாடுமுக்கம் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது.