ஐப்பசி பூரம்: மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதி காமாட்சி அம்மன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2026 10:11
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் அவதரித்த ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என, அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.