காளஹஸ்தி மணிகண்டேஸ்வர சுவாமி கோவிலில் கேதார கௌரி விரத பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2026 05:11
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் விநாயகர் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு இக்கோவிலின் துணைக் கோயிலான ஸ்ரீ மணிகண்டேஸ்வர சுவாமி கோவிலில் கேதாரேஸ்வர கௌரி விரதப் பூஜைகள் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலிலும் கேதார கௌரி விரத பூஜைகளில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் கேதார கௌரி விரத பூஜைகளில் ஈடுபட்ட பெண்கள் அவரவர் கொண்டு வந்த நோன்பு கயிறுகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டு நோன்பை நிறைவு செய்தனர்.இதற்காக கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தன.