சுருளி அருவியில் குளித்து சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2026 03:11
கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு, மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குளித்து மாலை அணிந்து விரதத்தை துவக்கினார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடைபெறும் மகர விளக்கு மண்டல பூஜை தரிசனம் செய்ய பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இதற்காக கார்த்திகை முதல் நாள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். ஆனால் கூட்டத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே மாலை அணிந்து விரதத்தை துவக்குகின்றனர். கம்பம் சுருளி வேலப்பர் சுப்ரமணியசாமி ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இன்று அதிகாலை கைலாசநாதர் குகை பகுதியில் நீராடினர். இவர்களுக்கு குருநாதர் நாராயணன் சுவாமி துளசி மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தார். முன்னதாக பாத விநாயகர் கோயிலில் பூஜை செய்தும், இங்குள்ள ஐயப்பன் கோயிலில் படி பூஜை ஆராட்டு விழாவும் நடந்தது. பக்தர்களின் சரண கோஷம் முழங்கினர்.