ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் அகண்ட பஜன் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2026 06:11
திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதும் நடைபெற்ற 24 மணி நேர அகண்ட பஜன் நிகழ்ச்சி, திருப்பூரிலும் நடைபெற்றது. பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையத்தில் கடந்த 14ம் தேதி மாலை தொடங்கிய நிகழ்ச்சி, இன்று மாலை வரை தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்றது. இதில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சாய் பக்தர்கள் குழுக்களாகப் பங்கேற்று பஜனை பாடினர். ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பாலவிகாஸ் சிறுவர்களும் பங்கேற்றனர். நிறைவில் மங்கள ஆரத்தி நடைபெற்றது.