Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் கந்த ... வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசை வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

15 நவ
2026
08:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் 5 தேர்களில் எழுந்தருளி நடைபெற்ற தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார். சிவ கைலாய வாத்தியம் மேளதாள வாத்தியங்கள் பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க தேவாரப் பாடல்கள் இன்னிசையுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம்:- சுவாமி அம்பாள் காளி ஆட்டங்களுடன் கலை கட்டிய தேரோட்ட விழா தேரோடும் வீதிகளை சுற்றி கோலாகலமாக வலம் வருகிறது:-


மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதாக புராணம் கூறுவதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி சிவாலயங்களில் துவங்கி  நடைபெற்று வருகிறது. சிவாலயங்களில் இருந்து பத்து நாள் உற்சவமாக கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி  பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. 


அந்த வகையில்  திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி தீர்த்தவாரி உற்சவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏழாம் தேதி ரிஷப கொடி ஏற்றத்துடன் தொடங்கி பத்து நாள் உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான இன்று காலை 1100 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது.   இதனை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள்  திருத்தேர்களில் எழுந்தருள செய்யப்பட்டது. ஆலயத்தில் சிறப்பு தீபாராதனை வழிபாடுகளுக்கு பின் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீ அபயாம்பிகை, ஸ்ரீ மாயூரநாதர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக 5 தேர்களில் எழுந்தருளைச் செய்யப்பட்டு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டத்தை திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். சிவ கைலாய வாத்தியங்கள் மேளதாளங்கள் பம்பை உடுக்கை மேளங்கள் முழங்க தேவார இன்னிசையுடன், சிவன் பார்வதி காளி வேடமணிந்து நாட்டுப்புறக் கலைஞர்களின் கோலாகல ஆட்டத்துடன்  நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேரோடும் நான்கு வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட எஸ்பி சினேஹா பிரியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். நாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் காவிரி கடை முகத் தீர்த்தவாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் முருகன் கடவுள் சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar