Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி ... திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: சுப்பிரமணியர் தெய்வானை மாலை மாற்றும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம் திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரவிழா

பதிவு செய்த நாள்

15 நவ
2026
09:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில், திருவிடைகழி முருகன் கோயில் உட்பட பல்வேறு முருகன் கோயில்களில் சூரசம்ஹாரவிழா 


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்திதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி (முருகப்பெருமான்)  அருள்பாலிக்கிறாா். இக்கோயில் நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கி வருகிறது.இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நேற்று நடந்தது. அதனையொட்டி செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.  செல்வமுத்துக்குமாரசுவாமி தங்க கொடிமரம் முன் எழுந்தருளி வைத்தியநாத சுவாமியிடம் இருந்து சூரனைவதம் செய்ய  வேல் வாங்கும் ஐதீகம் நடைபெற்றது. தொடா்ந்து, முருகப் பெருமான் அம்மனை வழிபட்டு, தங்க மயில் வாகனத்தில் மேற்குகோபுரவாசல் வழியாக எழுந்தருளி தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் முன்னிலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரவிழா நடந்தது. இதேபோல் மயிலாடுதுறை வதானேஸ்வரர் கோயிலில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரவிழா நடந்தது. மாயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ள தருமபுரம் குமரக்கட்டளை மற்றும் திருவிடைகழி சுப்ரமணியசுவாமி கோவில், பெரம்பூர் முருகன் கோவில் கோயில்களில் சூரசம்ஹாரவிழா சிறப்பாக நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar