இன்று கோடி சோமவாரம் : சிவ தரிசனம் செய்ய ஒரு கோடி திங்கட்கிழமை சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2026 10:11
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு கோடி என்றும், "சோமவாரம்" என்றால் திங்கட்கிழமை என்றும் பொருள்படும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது ஒரு கோடி திங்கட்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டதற்குச் சமமான புண்ணியத்தைத் தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, பால், தயிர், தேன் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்வது சிறந்தது. மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வீட்டில் சிவாஷ்டகம், சிவபுராணம் மற்றும் "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சந்திரன் தனது சாபம் நீங்கப் பெற்று சிவபெருமானின் அருளைப் பெற்ற நாள் என்பதால், ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்களுக்கு இது சிறந்த பரிகார நாளாகும். . சோமவார வழிபாடு செய்வதால் பாவங்கள் நீங்கி, கல்வி, செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெருகும்.