கார்த்திகை முதல் நாள்: செவிலிமேடு பாலாற்றில் முடவன் முழுக்கு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2026 05:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றங்கரையில் கார்த்திகை முதல் நாளான இன்று முடவன் முழுக்கு வழிபாடு நடைபெற்றது. முடவன் ஒருவருக்கு சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த நிகழ்வே கார்த்திகை மாத முதல் நாளில் முடவன் முழுக்கு திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி பாலாற்றங்கரையில் திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப் பணி அறக்கட்டளை சார்பில், பால்வண்ண நாதர் மணல் லிங்கத்திற்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.