11வயது சிறுவனாக ஜெயேந்திரரிடம் ஆசி: குஜராத்தில் நினைவு கூர்ந்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2026 11:11
மதுரை: விஜய யாத்திரையாக வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குஜராத் மாநிலத்தில் வாத் நகர் அருகே உள்ள உஞ்சா கிராமத்திற்கு சென்றார்.
இதே கிராமத்தில் 1980ம் ஆண்டு நவராத்திரி பூஜைகளில் பங்கேற்க காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்திருந்தார். அப்போது 11 வயது பிரம்மச்சாரியாக எம். கே. சங்கரநாராயணன் என்ற பூர்வாசிரம பெயரில் இருந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது வேத குருவும் தந்தையுமான முகம்மல கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுடன் சென்றிருந்தார். அந்தப் பயணத்தின் நினைவுகளைப் தற்போது சுவாமிகள் நினைவு கூர்ந்தார்.
கிராமத்தில் உள்ள ராமன்வாடியில் நவராத்திரி யாகசாலை அமைந்திருந்தது. கோயில் குளக்கரையில் மடத்தின் யானை, பசுக்கள், குதிரை, ஒட்டகம் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. பிராமண்வாடியில் அன்னதானம் நடைபெற்றது. சாலையின் இடப்புறத்தில் ஜீரக மண்டி இருந்தது. வாடியிலிருந்து இரண்டு பர்லாங் தொலைவில் நகராட்சி நீரேற்று நிலையம் அமைந்திருந்தது. இவ்வாறு அங்கிருந்த இடங்களையும் நிகழ்வுகளையும் சுவாமிகள் கூறினார். அந்த விஜயத்தின் புகைப்படங்கள் உஞ்சாவில் உள்ள உதீச் சஹஸ்ர பிராமண ஞாதி சம்ஸ்தான் பாதுகாத்து வைத்துள்ளது. அதில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறுவனாக ஆசி பெறும் படமும் உள்ளது. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இரு மகான்களுக்கிடையே நிலவிய புனிதமான தொடர்பையும் கொண்டுவருகின்றன.