வங்கனூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை ஒட்டி, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சீரமைப்பு பணிகள் கடந்த, ஆறு மாதமாக நடந்து வந்தன. தற்போது, பணிகள் நிறைவு பெற்று, புதுப் பொலிவுடன் விளங்குகிறது. நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக, யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. வரும், 15ம் தேதி கோவில் கோபுரத்திற்கு கலசநீர் ஊற்றப்பட உள்ளது. வங்கனூரைச் சேர்ந்த நிர்மலா ஏழுமலை என்ற பக்தர், மூலவர் விக்ரகத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதற்கான பணிகளை, ஊர் பொதுமக்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.