மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், (ஏரிகாத்த ராமர் கோவில்) தெப்போற்சவம், இன்று நடைபெற உள்ளது.காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு கருணாகரப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் மலர் அலங்காரத்தில், வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும்.இரவு 7:00 மணிக்கு பெருமாள், கோவில் அருகில் உள்ள ராமபுஷ்கரணியில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வருவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.